ஊர்க்காவல் படைக்கு தேர்வு: 104 பேருக்கு பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படைக்கு தேர்வு: 104 பேருக்கு பரிசோதனை

Added : டிச 09, 2020
Share
திருப்பூர்:திருப்பூர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட, 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் சேர, 80 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சமீபத்தில் நேர்முக தேர்வு நடந்தது. 74 பேர் பங்கேற்றனர். அதில், 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய, 74 பேர் மற்றும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 30 பேர் என, 104 பேருக்கு, 45 நாட்கள்
 ஊர்க்காவல் படைக்கு தேர்வு: 104 பேருக்கு பரிசோதனை

திருப்பூர்:திருப்பூர் ஊர்க்காவல் படைக்கு தேர்வு செய்யப்பட்ட, 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் சேர, 80 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சமீபத்தில் நேர்முக தேர்வு நடந்தது. 74 பேர் பங்கேற்றனர். அதில், 70 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய, 74 பேர் மற்றும் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 30 பேர் என, 104 பேருக்கு, 45 நாட்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.பயிற்சிக்கு முன்னதாக, 104 பேருக்கு கொரோனா கண்டறிய சளி மாதிரி பரிசோதனை ஊர்க்காவல் படை வளாகத்தில் நேற்று நடந்தது. இரு நாட்களில் பயிற்சி துவங்க உள்ளது. மாநகர ஊர்க்காவல் படை மண்டல தளபதி பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X