பொது செய்தி

தமிழ்நாடு

2 இடத்தில் 'மினி கிளீனிக்' அவிநாசியில் அமைகிறது

Added : டிச 09, 2020
Share
Advertisement
அவிநாசி:பொது சுகாதாரத்துறை சார்பில், அவிநாசியில், 2 இடங்களில் மினி கிளீனிக் திறக்கப்பட உள்ளன.'தமிழகத்தில், இம்மாத இறுதிக்குள், 2,000 மினி கிளீனிக் திறக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.அவ்வகையில், அவிநாசி ஒன்றியத்தில், பெரியாயிபாளையம் மற்றும் தெக்கலுார் என, இரு இடங்களில் 'கிளீனிக்' அமைக்கப்பட உள்ளது. பெரியாயிபாளையத்தில், பயனற்ற நிலையில் இருந்த

அவிநாசி:பொது சுகாதாரத்துறை சார்பில், அவிநாசியில், 2 இடங்களில் மினி கிளீனிக் திறக்கப்பட உள்ளன.'தமிழகத்தில், இம்மாத இறுதிக்குள், 2,000 மினி கிளீனிக் திறக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.அவ்வகையில், அவிநாசி ஒன்றியத்தில், பெரியாயிபாளையம் மற்றும் தெக்கலுார் என, இரு இடங்களில் 'கிளீனிக்' அமைக்கப்பட உள்ளது. பெரியாயிபாளையத்தில், பயனற்ற நிலையில் இருந்த பள்ளி கட்டடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். மருத்துவ சேவை சார்ந்த பயன்பாட்டுக்கென அக்கட்டடத்தை வைத்திருந்தனர். அதில், கிளீனிக் திறக்கப்பட உள்ளது.அதேபோல், தெக்கலுாரில் துணை சுகாதார நிலைய கட்டடத்தில், செயல்பட உள்ளது. மினி கிளீனிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு துாய்மை பணியாளர் பணிபுரிவர்.வரும், 15ம் தேதி இவை பயன்பாட்டுக்கு வரும் என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X