கோவை:கோவையில், திருமணத்துக்கு மறுத்த காதலியை கத்தியால் குத்தி விட்டு, காதலன் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.கோவை, ரத்னபுரி, வி.சி.என்., லே அவுட்டில் வசித்து வருபவர் விவேக்,29. மொபைல் போன் டவர் அமைக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது.மொபைல் போன் வாயிலாக அடிக்கடி, காதலியுடன் பேசி வந்தார். இந்த விஷயம், இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்ததால் கண்டித்தனர். இதனால் காதலனுடன் பேசுவதை இளம்பெண் நிறுத்தினார்.இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், காதலியின் வீட்டுக்கு சென்ற விவேக், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இளம்பெண் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த விவேக் கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.வீட்டிற்கு சென்ற விவேக், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ரத்னபுரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE