லவ்லி கார்டனில் குப்பை குவியல்குனியமுத்துார், லவ்லி கார்டன் பகுதியில், குப்பை தொட்டி இல்லாததால், இப்பகுதியில் சேகரமாகும் குப்பை, சாலையோரம் குவிக்கப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டி வைத்து, குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- வசந்தா, லவ்லி கார்டன்.
கோவில் அருகில் குப்பை குவியல்வரதராஜபுரம் நால்ரோடு - நீலிக்கோணாம்பாளையம் ரோட்டில், மகாலட்சுமி கோவில் அருகில், குவியும் குப்பை முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இவை காற்றில் பறந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தங்கமணி, நீலிக்கோணாம்பாளையம்.
விளக்கு எரிவதில்லைகே.கே.புதுார், ராமலிங்க நகர், இரண்டாவது வீதி மற்றும் பி.வி.கிருஷ்ணன் வீதி மூன்றாவது ரோடு சந்திப்பில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 10) பல மாதங்களாக, விளக்கு எரிவதில்லை.- ராஜகோபால், கே.கே.புதுார்.
குண்டும் குழியுமான ரோடுசத்தி ரோடு, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் எதிரில், சி.கே.காலனி நுழைவாயிலில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்; அடிக்கடி விபத்து நடக்கிறது.- கண்ணன், சி.கே.காலனி.
வீணாகுது தண்ணீர்சங்கனுார், கண்ணப்பநகர், அருள் கார்டனில், பிரதான குழாய் உடைப்பால், போர்வெல் நீர் வீணாகிறது.- ஜெபராஜ், அருள் கார்டன்.
தார் சாலை அமைக்கணும்மாநகராட்சி, 73வது வார்டுக்கு உட்பட்ட, 80 அடி ரோடு அருகே, ஸ்ரீபதி நகர் விரிவாக்கத்தில் தார் சாலை இல்லாததால், மழை நேரங்களில், இங்குள்ள மண் சாலை சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இங்கு தார் சாலை அமைக்க வேண்டும்.- ராபர்ட், ஸ்ரீபதி நகர்.
மின் கம்பிகளை உரசுது மரக்கிளைகள்மாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, சேரன் மாநகர், ஏழாவது பஸ் ஸ்டாப் அருகில், மின் கம்பிகளை உரசியபடி வளர்ந்துள்ள, மரக்கிளைகள் அகற்ற வேண்டும்.- ராஜூ, சேரன் மாநகர்.
மேம்பாலத்தை பராமரிக்கணும்திருச்சி ரோடு, ஒண்டிப்புதுார் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில், மரக்கிளைகள் முளைக்கத்துவங்கியுள்ளன. இவை வளர்ந்து மரமாகி, தடுப்புச்சுவரை பிளக்கும் முன், இவற்றை அகற்ற வேண்டும்; மேம்பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும்.- சுப்ரமணியன், ஒண்டிப்புதுார்.
மகாலிங்கபுரத்தில் சுகாதார கேடுவெள்ளலுார் ரோடு, மகாலிங்கபுரம், கேம்ப் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள, குப்பை தொட்டி சிதிலமடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால், குப்பை இதன் அருகிலேயே குவிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதியில் புதிதாக தொட்டி வைக்க வேண்டும்; குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- கணேசன், மகாலிங்கபுரம்.
எம்.எஸ்.கார்டனில் இருட்டுகுனியமுத்துார், எம்.எஸ்.கார்டனில் உள்ள, மின் கம்பத்தில் (எண்:5) கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, விளக்கு எரிவதில்லை.- உமர்பாரூக், எம்.எஸ்.கார்டன்.
சாக்கடை கால்வாய் அடைப்புமாநகராட்சி, 85வது வார்டுக்கு உட்பட்ட, செட்டிவீதி, காட்டேரி தோட்டம், மூன்றாவது நுழைவாயிலில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சுந்தரம், செட்டி வீதி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE