பல்லடம்:சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் தாலுகா அலுவலகம் வந்தன.திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, தெற்கு, மடத்துகுளம், பல்லடம், உடுமலை ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் 'ஸ்ட்ராங் ரூமில்' வைத்து பாதுகாக்கப்படுவது வழக்கம்.அவ்வாறு, தேர்தல் முன்னேற்பாடாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று பல்லடம் எடுத்து வரப்பட்டு, 'ஸ்ட்ராங் ரூமில்' பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பல்லடத்துக்கு கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக, 4,050 'பேலட் யூனிட்' வேலுாரிலிருந்து வந்துள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து, 1,930 கண்ட்ரோல் யூனிட், மற்றும் 4,610 'விவி பேட்' ஆகியவை விரைவில் வரும்,' என்றனர். டி.ஆர்.ஓ., ஜெகநாதன் மேற்பார்வையில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'ஸ்டிராங் ரூமில்' வைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE