பல்லடம்:வழித்தடத்தில் இயங்கும் வகையில், பஸ்களை பராமரித்து தரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக பல்லடம் டிப்போ கிளை மேலாளரிடம் அளித்த கோரிக்கை மனு:பல்லடம் கிளையில், 70க்கும் மேற்பட்ட பஸ்கள், 400க்கும் அதிகமான டிரைவர், நடத்துனர்கள் உள்ளனர். இதனிடையே, தொழிலாளருக்கு ஏற்பட்டு வரும் பல்வேறு பிரச்னைகள், மற்றும் அசவுகரியங்களை நிவர்த்தி செய்து தர வேண்டும்.திருப்பூரில் நடந்து வரும், 'ஸ்மார்ட் சிட்டி' வேலை காரணமாக போதிய குடிநீர், கழிவறை வசதி இல்லை. தொடர்ந்து, 8 மணி நேரம் ஓய்வின்றி பணிபுரிவதால் மன சோர்வு, உடல் சோர்வு, உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. பழைய நேர முறைப்படி பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.பல்லடம் கிளை பணிமனையில் ஓய்வறை, கழிவறை, மற்றும் உணவக அறையை துாய்மைப்படுத்தி கிருமிநாசினி தெளிப்பதுடன் தரமான உணவு வழங்க வேண்டும். பஸ்களை நன்கு பராமரித்து வழித்தடங்களில் இயங்கும் வகையில், வழங்க வேண்டும். தரமான முக கவசம், கையுறை, சானிடைசர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE