பொது செய்தி

தமிழ்நாடு

புவனேஸ்வர், ஓகா, மும்பைக்கு பண்டிகை கால ரயில்கள் இயக்கம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
மதுரை:ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர், ஓகா, மதுரை வழியாக நாகர்கோவில் -மும்பை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.புவனேஸ்வரில் டிச., 11 முதல் 25 வரை வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(08496) சனி இரவு 10:35 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் டிச., 13 முதல் 27 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:50 மணிக்கு

மதுரை:ராமேஸ்வரத்திலிருந்து புவனேஸ்வர், ஓகா, மதுரை வழியாக நாகர்கோவில் -மும்பை இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

புவனேஸ்வரில் டிச., 11 முதல் 25 வரை வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(08496) சனி இரவு 10:35 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும். மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் டிச., 13 முதல் 27 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8:50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(08495) திங்கள் மாலை6:10 மணிக்கு புவனேஸ்வர் செல்லும்.

இந்த ரயில்கள் குர்தாரோடு, பெர்காம்பூர், விஜயநகரம், விசாகபட்டிணம், துவ்வாடா, விஜயவாடா, நெல்லுார், குண்டூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை,மானாமதுரை, பரமக்குடி,ராமநாதபுரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரத்திலிருந்து டிச., 11 முதல் 25 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 10:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06733) திங்கள் காலை 10:20 மணிக்கு ஓகா செல்லும். மறுமார்க்கத்தில் ஓகாவிலிருந்து டிச., 15 முதல் 29 வரை செவ்வாய்க்கிழமைகளில் காலை 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06734) வியாழன் இரவு 7:15 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்.

இந்த ரயில்கள் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, துரோணாசலம், கர்னுால்சிட்டி, மெகபூப்நகர், கச்சகுடா, கமாரெட்டி, நிஜாமாபாத், முட்கட், நான்டேட், பூர்ணா, பர்பானி, ஜல்னா அவுரங்காபாத், நாகர்சால், மன்மாட், ஜல்கான், நன்டூர்பர், சூரத், வதோரா, ஆமதாபாத், விரம்கம், சுரேந்திரநகர்,வான்கனேர், ராஜ்கோட், ஹாபா, ஜாம்நகர், ஹம்பாலியா, துவாரகா ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

நாகர்கோவிலில் டிச., 13 முதல் 30 வரை வியாழன், ஞாயிறுக்கிழமைகளில் காலை 6:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06352) வெள்ளி, திங்கள் இரவு 7:15 மணிக்கு மும்பை செல்லும். மறுமார்க்கத்தில் மும்பையில் டிச., 14 முதல்2021 ஜன., 1 வரை வெள்ளி, திங்கள்கிழமைகளில் இரவு 8:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06351)ஞாயிறு, புதனில் காலை 7:30 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, தாடி பத்திரி, குண்டக்கல், அடோனி, மந்த்ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர், வாடி, கலபுராகி, சோலாப்பூர், துர்துவாடி,டான்ட் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X