திருப்பூர்:தமிழக அரசு, சர்க்கரை கூடுதலாக பெறும் ரேஷன் கார்டுகளை, அரிசி கார்டுகளாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு வழங்கியுள்ளது. சர்க்கரை கார்டுதாரர், நேரில் சென்று விண்ணப்பித்தோ, 'ஆன்லைன்' மூலமாகவோ, வகை மாற்றம் கோரி விண்ணப்பிக்கலாம்.அதன்படி, tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று, முகப்பு பக்கத்தின் கீழே, சிவப்பு நிறத்தில், மின்னிக்கொண்டிருக்கும், 'சர்க்கரை கார்டுகளை மாற்ற' என்ற பட்டனை அழுத்தி, ரேஷன் கடையில் பதிவு செய்துள்ள 'மொபைல்' எண் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்தால், ஓ.டி.பி., எண்கள் கிடைக்கும்.அந்த எண்ணை பயன்படுத்தி, வகை மாற்றம் பகுதிக்கு செல்லலாம். பெயர், கார்டு எண், கடை எண்ணை சரிபார்த்து, 'வகைமாற்றம்' என்ற பகுதிக்கு சென்று, 'சர்க்கரை கார்டு மாற்றம்' என்று தேர்வு செய்து, உறுதிமொழி பக்கத்தை 'டிக்' செய்து, பதிவு செய்தால், உடனடியாக விண்ணப்ப எண் கிடைக்கும்.ஒரு சில நாட்களில், கார்டு வகை மாற்றம் செய் யப்படும் என, குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE