சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் மறியல் போராட்டம்: 308 பேர் கைது: பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறப்பு: வாகனங்கள் இயக்கம்

Added : டிச 09, 2020
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில் நடந்த மறியல் போராட்டத்தில், 308 பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரியில், மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்.,- தி.மு.க.,- கம்யூ., கட்சிகளின் சார்பில், கடையடைப்பு; ஆர்ப்பாட்டம்; மறியல் போராட்டம் நடந்தது.* ஊட்டியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள்; வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. காங்.,- தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ.,
 நீலகிரியில் மறியல் போராட்டம்: 308 பேர் கைது: பெரும்பாலான பகுதிகளில் கடைகள் திறப்பு: வாகனங்கள் இயக்கம்

ஊட்டி:நீலகிரியில் நடந்த மறியல் போராட்டத்தில், 308 பேர் கைது செய்யப்பட்டனர்.நீலகிரியில், மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்.,- தி.மு.க.,- கம்யூ., கட்சிகளின் சார்பில், கடையடைப்பு; ஆர்ப்பாட்டம்; மறியல் போராட்டம் நடந்தது.* ஊட்டியில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அரசு பஸ்கள்; வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின. காங்.,- தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணேஷ் தலைமையில், தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் முன்னிலையில், ஏ.டி.சி.,யில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, மா.கம்யூ., தாலுகா செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 13 பேர் கைது செய்யப்பட்டனர்.* குன்னுாரில் அருவங்காடு, வெலிங்டன், பேரக்ஸ், கேத்தி,எல்லநள்ளி, பெட்போர்டு, வண்டி சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டன. மா.கம்யூ, சார்பில், நகர செயலாளர் ராமன்குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம் நடந்தது. இதில், 20 பேர் கைது செய்யப்பட்டனர்.* பந்தலுாரில், எருமாடு, அய்யன்கொல்லி,பிதர்காடு உள்ளிட்ட பகுதிகளில், தி.மு.க.,-காங்.- மா.கம்யூ.,-வி.சி., சார்பில் மறியல்; ஆர்ப்பாட்டம் நடந்தது. மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ரமேஷ் தலைமையில், 165 பேர் கைது செய்யப்பட்டனர். கடைகள் அடைக்கப்பட்டன.* கூடலுாரில் மதியம் வரை கடைகள் அடைக்கப்பட்டு, ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் மிக குறைந்த அளவில் இயங்கின. எம்.எல்.ஏ., திராவிடமணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட, 65 பேர் கைது செய்யப்பட்டனர்.* கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, சோலுார் மட்டம் , அரவேனு மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் மதியம் வரை மட்டுமே பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. கோத்தகிரி பஸ் ஸ்டாண்டில் மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர், 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X