அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய திருத்த சட்டங்களை எதிர்ப்பதாக காங்.,- தி.மு.க., இரட்டை வேடம்: மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் விளாசல்

Added : டிச 09, 2020
Share
Advertisement
மதுரை:''மத்திய விவசாய திருத்த சட்டங்களால் பா.ஜ.,விற்கு நல்ல பெயர் ஏற்படும் என கருதி காங்., தேசியவாத காங்., தி.மு.க., கட்சிகள் இதை எதிர்ப்பது போல இரட்டை வேடம் போடுகின்றன,'' என மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் புதிய வேளாண் திருத்த சட்டங்களை வரவேற்றுள்ளனர். சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

மதுரை:''மத்திய விவசாய திருத்த சட்டங்களால் பா.ஜ.,விற்கு நல்ல பெயர் ஏற்படும் என கருதி காங்., தேசியவாத காங்., தி.மு.க., கட்சிகள் இதை எதிர்ப்பது போல இரட்டை வேடம் போடுகின்றன,'' என மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் புதிய வேளாண் திருத்த சட்டங்களை வரவேற்றுள்ளனர். சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் நுாற்றுக்கணக்கான விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வரவேற்றனர். இச்சட்டங்களை காங்., சரத்பவார், தி.மு.க.,வும் ஆதரித்தனர்.

ஆனால் இன்றைக்கு அவர்கள் போலி வேஷம் போட்டு விவசாயிகளை திசை திருப்பும் வேலை செய்கின்றனர். 2010ல் சரத்பவார் மத்திய அமைச்சராக இருந்த போது அமைச்சரவை கமிட்டி அமைத்து ஆதரவு தெரிவித்து விட்டு, இன்று பா.ஜ., கொண்டு வந்தது என்பதற்காகவே காங்கிரசும், சரத்பவாரும் எதிர்க்கிறார்கள்.

தமிழகத்தில் தி.மு.க., அதன் 2016 சட்டசபை தேர்தல் அறிக்கையில் பக்கம் 24ல் விவசாயிகள் இடைத்தரகர் இன்றி சந்தை விலைக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்க சட்டம் கொண்டு வருவோம் என குறிப்பிட்டுள்ளது. ஆனால் விவசாயிகளை திசை திருப்பி இந்த அரசுக்கு எதிராக போராட வேண்டும் என துாண்டிவிட தி.மு.க., இன்றைக்கு எதிர்க்கிறது. எனவே காங்., தி.மு.க., இந்த விஷயத்தில் இரட்டை வேடம் போடுகின்றன.

விவசாயிகள் நண்பனாக பிரதமர் மோடி உள்ளார். விவசாயிகள் வங்கியில் கடன் வாங்குவதை தவிர்க்க ஆண்டுக்கு ரூ. ஆறாயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தில் மட்டும் 41 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தில் நிதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பந்த் தோல்வியடைந்துள்ளது. சில இடங்களில் தி.மு.க., வற்புறுத்தி கடைகளை அடைக்க மிரட்டியுள்ளனர்.

நடிகர் ரஜினி, கமல் போன்றவர்கள் பா.ஜ., பி டீம் என சொல்வோர் சொல்வார்கள். அதற்கு பதில் சொல்ல முடியாது. இது ஜனநாயக நாடு. அவரவர் விருப்பப்படி கட்சி ஆரம்பிக்கின்றனர். தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும். வேல்யாத்திரை தமிழகத்தில் பெரிய வெற்றியை பெற்றது. பா.ஜ.,வில் இணைய நிறைய பிரபலங்கள் பேசி வருகின்றனர். விரைவில் இணைவர், என்றார்.மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன், மாநில செயலாளர் முருகானந்தம், நகர் தலைவர் சீனிவாசன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X