கோத்தகிரி:கோத்தகிரி அளக்கரை பகுதியில், தேயிலை தோட்டங்களில், உலா வரும் கரடிகளால், பசுந்தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.கோத்தகிரி அளக்கரை பகுதியில் அடர்ந்த வனமும், அதனை சுற்றி தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. இப்பகுதியில், காட்டெருமை, சிறுத்தை மற்றும் கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளன.வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள், தேயிலை தோட்டங்களில் நடமாடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, ஒரு கரடி தேயிலை தோட்டங்களில் தனியாக சுற்றி வருகிறது.பெரும்பாலான நேரங்களில், சாலைக்கு வரும் கரடி, வாகனங்கள் வந்துச் செல்லும் போது, தேயிலை தோட்டத்திற்குள் பதுங்குவதும், வாகனங்கள் சென்ற பிறகு, சாலையில் நடமாடுவதுமாக சுற்றித்திரிகிறது.இதனால், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பசுந்தேயிலை பறித்து, பராமரிப்பு பணிகளை அச்சத்திற்கு இடையே மேற்கொண்டு வருகின்றனர்.எனவே, கரடியை வனப்பதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE