அயோத்தி:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் டிச.15ம் தேதிக்கு பின் துவங்கப்படவுள்ளதாக தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது.
இங்குள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை துவங்குவது குறித்த இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நேற்று முடிவடைந்தது.இதில் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் 'டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ்' நிறுவனம் சென்னை மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் கட்டுமான கலைஞர் பிரஹம் விஹாரி சுவாமி ராமர் கோயில் கட்டட கலைஞர்ஆஷிஷ் சோம்புரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
![]()
|
கூட்டம் குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறும்போது ''கோயிலுக்கானஅஸ்திவார பணிகள் வரும் 15ம் தேதிக்கு பின் துவங்கும்; முதற்கட்டமாக வெளிப்புற சுவருக்கான பணிகள் துவங்கப்படும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE