குரங்கின் பாசம்
கடலுார் மாவட்டம், திட்டக்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே கடந்த சில நாட்களாக, ஒரு குரங்கு, நாய் குட்டியை துாக்கி கொண்டு திரிந்துள்ளது. மேலும், தனக்கு கிடைக்கும் உணவை நாய்க்குட்டிக்கும் கொடுத்து வளர்த்தது. அதோடு, அங்குமிங்கும் தாவும் போதும் நாய்குட்டியுடன் தாவி வந்தது. நாய்க்குட்டிக்கு ஆபத்து என நினைத்த அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு குரங்கிடமிருந்து நாய் குட்டியை மீட்டனர். இதுதொடர்பான, புகைப்படங்கள் மற்றும் வீடியோ வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இலைகளுக்குள் இளைஞர்
இளைஞர் ஒருவர், மலைப்பாதை ஒன்றில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், மலையின் ஒரு இடத்தில் மட்டும் காய்ந்த இலைகள் விழுந்து கழுத்தளவுக்கு குவிந்து கிடந்தது. இதைப் பார்த்த அந்த இளைஞர் அந்த காய்ந்த இலைகளுக்குள்ளும் சைக்கிளை ஓட்டிச் சென்று அசத்தினார். மொபைல் போனில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி பலரையும் கவர்ந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் புதருக்குள் மிதந்து வருவது போல் இருப்பதாக, 'கமென்ட்' அடித்துள்ளனர்.
கைதிகளுக்கான சுரங்கம்
பெரு நாட்டின், காஸ்ட்ரோ சிறைச்சாலையில் உள்ள உணவு விடுதியின் பக்கவாட்டில் இருந்து தோண்டப்பட்ட, 180 மீட்டர் நீள சுரங்கப் பாதையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த கைதிகளை தப்ப வைப்பதற்காகவும், சிறைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருவதற்காகவும், சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருக்கலாம் என, அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, சுரங்கப்பாதையின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE