சென்னை:தமிழகத்தில், சென்னை, கோவை மாவட்டங்களை தவிர்த்து, 35 மாவட்டங்களில், கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது.
இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 228 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், நேற்று மட்டும், 65 ஆயிரத்து, 186 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்-டன.அதில், சென்னையில், 333 பேர்; கோவையில், 122 பேர் என, மாநிலம் முழுதும், 1,236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று, 100க்கும் கீழே பதிவாகி உள்ளது; உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன.இதுவரை, 1.26 கோடி மாதிரிகள் பரிசோதனையில், ஏழு லட்சத்து, 92 ஆயிரத்து, 788 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.சிகிச்சையில் இருந்தோரில், சென்னையில், 292; கோவையில், 112 என, 1,330 பேர் நேற்று, குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து, ஏழு லட்சத்து, 70 ஆயிரத்து, 378 பேர் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
தற்போது, சென்னையில், 3,252; கோவையில், 876; செங்கல்பட்டில், 578 என, 10 ஆயிரத்து, 588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில், நேற்று மூன்று பேர் உட்பட, மாநிலம் முழுதும், 13 பேர் இறந்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை, 11 ஆயிரத்து, 822 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE