பொள்ளாச்சி;பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்வதால், கொடி வகை காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும் என, தோட்டக்கலை துறை அறிவுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் கொடி வகை காய்கறிகளான, புடலை, பாகற்காய், பீர்க்கன், சுரைக்காய், வெள்ளரி, பூசணி, அரசாணி, தக்காளி ஆகியவை பந்தல் முறையிலும், பாரம்பரிய முறையிலும் அதிகம் பயிரிடப்படுகின்றன. அதிகளவு மழை பெய்யும் போது, கொடி வகை பயிர்களில் நோய், பூச்சி தாக்குதல் அதிகரித்து, பாதிப்பு ஏற்படும்.இது குறித்து, தெற்கு தோட்டக்கலை அதிகாரிகள் கூறியதாவது:கொடி வகை பயிர்களை மழைக்காலங்களில் பழ ஈ அதிகமாக தாக்கும். இதனால், அறுவடைக்கு முன்பே காய்கள் வீணாவதுடன், செடிகளும் பாதித்து, பூக்கள், பிஞ்சுகள் உதிர்ந்து விடும்.இதைத் தவிர்க்க, பாதிக்கப்பட்ட காய்களை உடனடியாக அழிக்க வேண்டும். தண்ணீரில் மூன்று சதவீதம் வேப்ப எண்ணெய் கலந்து செடிகள் மீது தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு ஒன்று வீதம் விளக்கு பொறிகள் வைத்து, ஈக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.ஐந்து கிராம் கருவாடு, ஒரு மில்லி டைகுளோர்வாஸ் மருந்து ஆகியவற்றை பஞ்சில் நனைத்து பாலித்தீன் கவரில் விளைநிலத்தில் வைத்தால் பழ ஈக்கள் கவரப்பட்டு, விழுந்து இறக்கும். இந்த பொறி ஏக்கருக்கு, 20 இடங்களில் அமைக்கலாம்.கொடி வகை பயிர்களில், எக்காரணம் கொண்டும் சல்பர் மற்றும் காப்பர் கலந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. பயிரில் சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு, 0.5 கிராம் கார்பன்டைசிம் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் காணப்பட்டால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு கிராம் மாஸ்கேசெப் கலந்து தெளிக்க வேண்டும்.குறிப்பாக, அதிகளவு மழைப்பொழிவின் போது, விளைநிலத்தில் தண்ணீர் தேங்கும். 24 மணி நேரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கினால், பயிர்களின் வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்து விடும். எனவே, விளை நிலத்தில் தண்ணீர் தேங்காமல் வடித்து விடுவது அவசியம்.இவ்வாறு, அறிவுரை வழங்கியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE