சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழிவு கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு: பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதிப்பு

Added : டிச 09, 2020
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடியிருப்பு பகுதியில் கழிவு கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி - மோதிராபுரம் ரோட்டில், பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த ரோட்டை, பலரும் கழிவுகளை கொட்டும் குப்பைக்கிடங்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால்,
 கழிவு கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு: பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடியிருப்பு பகுதியில் கழிவு கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி - மோதிராபுரம் ரோட்டில், பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன.
இந்த ரோட்டை, பலரும் கழிவுகளை கொட்டும் குப்பைக்கிடங்காக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனால், ரோட்டோரம் கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு, குடியிருப்புகளில் துர்நாற்றமும், நோய் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது.இது குறித்து அப்பகுதி மக்கள் தொடர் புகார் எழுப்பியதை அடுத்து, பொள்ளாச்சி சப்-கலெக்டரே நேரடியாக தலையிட்டு, அங்கு கழிவு கொட்டிய வாகனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யவும், அப்பகுதியை சுத்தம் செய்யவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி மாலை, சரக்கு ஆட்டோவில் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்படுவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். இதையடுத்து, அந்த வாகனத்தை சிறைப்பிடித்து, பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.கழிவு கொட்டிய ஆனந்த் என்ற நபருக்கு, பேரூராட்சி நிர்வாகம் தொற்று நோய் பரப்ப முயன்ற குற்றத்துக்காக, 2,500 ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், அப்பகுதியை துாய்மை படுத்தும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்படும், என, பேரூராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மக்கள் சமாதனமடைந்து திரும்பிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X