பொது செய்தி

தமிழ்நாடு

பனி காலத்தில் கறவை பராமரிப்பு: கால்நடை துறையினர் 'அட்வைஸ்'

Added : டிச 09, 2020
Share
Advertisement
ஆனைமலை:'உழவன்' செயலி மற்றும் கால்நடை வல்லுனர் அமைப்பு செயலிகளில், கோவை கால்நடை பராமரிப்புத்துறை பனி கால அறிவுரை வழங்கியுள்ளது. அதில், கோவை மாவட்டம் முழுவதிலும் இரவில் கடும் பனி, சில நேரங்களில் பகலில் வெயில் நிலவுவதால், மாடுகளுக்கு மடி வீக்கம், சத்து குறைபாடு, உண்ணி தாக்குதல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.இதனால், பால் உற்பத்தி குறைவதுடன், நோய் தாக்குதலால் மாடுகள்

ஆனைமலை:'உழவன்' செயலி மற்றும் கால்நடை வல்லுனர் அமைப்பு செயலிகளில், கோவை கால்நடை பராமரிப்புத்துறை பனி கால அறிவுரை வழங்கியுள்ளது. அதில், கோவை மாவட்டம் முழுவதிலும் இரவில் கடும் பனி, சில நேரங்களில் பகலில் வெயில் நிலவுவதால், மாடுகளுக்கு மடி வீக்கம், சத்து குறைபாடு, உண்ணி தாக்குதல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகிறது.இதனால், பால் உற்பத்தி குறைவதுடன், நோய் தாக்குதலால் மாடுகள் இறக்கும் அபாயமும் உள்ளது. பனி காலத்தில் மாட்டின் மடிக்காம்புகளில், பனி வெடிப்பு ஏற்படுவதுடன், தரையில் படுக்கும் போது, கிருமிகளால் மடி வீக்கம் ஏற்படுகிறது.மடியில் கிருமிகள் தாக்குவதை தடுக்க, கிருமி நாசினியாக, 'பொட்டாசியம் பெர்மாங்கனேட்' ஐந்து கிராமை, 12 லிட்டர் தண்ணீரில் கலந்து, மடிக்காம்புகளை கழுவ வேண்டும். பனி வெடிப்பு ஏற்படுவதை தடுக்க, பால் கறப்பதற்கு முன்பும், கறந்த பின்பும் விளக்கெண்ணெய் தேய்க்கலாம். கொட்டகையை சுற்றிலும் இரவு நேரம் துணியை கட்டிவிட வேண்டும். பனி காலம் முடியும் வரை, கால்நடைகளை அவ்வப்போது அரசு கால்நடை மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தொண்டை அடைப்பான் தடுப்பூசி போட வேண்டும்.இவ்வாறு, அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X