திருப்பூர்:வறட்சியை தாங்கி வளரும், 'இசி-4' ரக தைலமரங்களை வளர்த்து, வருவாய் பெறலாம் என, இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக்குழுவினர், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்துடன் இணைந்து, அரியவகை மரங்கள் வளர்க்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், தரிசு நிலத்தில், வறட்சியை தாங்கி வளரும் தன்மையுள்ள, 'இசி-4' ரக தைலமரத்தை வளர்க்கலாம் என, அந்நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன ஆராய்ச்சியாளர் புவனேஸ்வரன் கூறியதாவது:தைலமரம் வளர்த்தால், மண்வளம் கெட்டுப்போகும், நிலத்தடிநீர் பறிபோகும், கால்நடைகள் மலடாகும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம். தைலமரம் பக்கவேர்களுடன் வளரும் தாவரம் என்பதால், நிலத்தடி நீருக்கு பாதிப்பு வராது.காகித நிறுவனம், காகிதக்கூழ் தயாரிக்க, இவ்வகை மரங்களை அதிகம் பயன்படுத்துகின்றன. நடவு செய்த, ஐந்து முதல், ஏழு ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.
ஒருமுறை நடவு செய்தால், மூன்று சுற்று அறுவடை செய்யலாம்.தமிழகத்தில் உள்ள, தரிசு நிலத்தில், வறட்சியை தாங்கி வளரும், 'இசி-4' ரக தைலமரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் காகித நிறுவனத்திடம், மானிய விலையில், 2 ரூபாய்க்கு நாற்று கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE