ஆனைமலை:கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு வரும், 13ம் தேதி இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது.
தமிழகத்தின் முக்கிய ஆன்மிக ஸ்தலமான, கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.இந்த மாதத்துக்கான சர்வ அமாவாசை வரும், 13ம் தேதி இரவு, 12:30 மணிக்கு துவங்கி, 14ம் தேதி இரவு, 10:32 மணி வரையில் நடக்கிறது.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'அரசு உத்தரவுப்படி, 13ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். பக்தர்கள் சாதாரண நாட்களைப்போல, காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரையில் மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும். அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். முகக்கசவம் அணிந்து, சமூக விலகல் பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE