பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை ஏலத்தில் கொப்பரை விலை உயர்வு

Added : டிச 09, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை விலை உயர்ந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 141 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 110 முதல், 132.50 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 132 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 75.50 முதல், 98.50

ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை விலை உயர்ந்தது.ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று, விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமையில் ஏலம் நடந்தது. முதல் தர கொப்பரை, 141 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 110 முதல், 132.50 ரூபாய் விலை கிடைத்தது.இரண்டாம் தர கொப்பரை, 132 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோவுக்கு, 75.50 முதல், 98.50 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம், 273 கொப்பரை மூட்டைகளை, 58 விவசாயிகள் கொண்டு வந்தனர், 12 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இந்த வாரம் கொப்பரை கிலோவுக்கு, 2.40 ரூபாய் விலை அதிகரித்தது. இந்த வாரம் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட, 132.50 ரூபாய் தான், இந்த இரண்டு ஆண்டின் அதிகபட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, கொப்பரை விலை உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X