உடுமலை;உடுமலை அமராவதி அணையிலிருந்து,உபரி நீர் வெளியேற்றம் குறைந்தது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, நடப்பு ஆண்டில், 3வது முறையாக நிரம்பி, கடந்த, 4 நாட்களாக ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமராவதியின் துணை ஆறுகளாக உள்ள, பழநி தாலுகாவிலுள்ள பாலாறு - பொருந்தலாறு, குதிரையாறு, வரதமாநதி அணை ஆகிய ஆறுகளிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், நேற்றுமுன்தினம், ஆற்றில் வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி வரை நீர் சென்று, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இந்நிலையில், அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், அணைக்கு நீர் வரத்தும் குறைந்தது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 89.51 அடி நீர் மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கன அடியில், 4,002 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,700 கன அடி நீர் வரத்து இருந்தது. வரும் நீர் அனைத்தும் உபரியாக, ஆற்றில், 2,400 கன அடி நீரும், பிரதான கால்வாயில், 300 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டது.நீர்வரத்து அதிகரிப்புதிருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக, அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்திலுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை சூழ்ந்து, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல மாதங்களுக்கு பிறகு, திருமூர்த்தி அணைக்கு பாலாற்றின் மூலம், வினாடிக்கு, 690 கன அடி நீர் வரத்து நிலவியது.திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து, காண்டூர் கால்வாய் வழியாக, 651 கன அடி நீர் வந்து கொண்டிருந்ததால், அணைக்கு நீர் வரத்து, 1,341 கன அடியாக இருந்தது.அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையிலும், நீர் வரத்து அதிகரிப்பால், ஒரு அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், 43.33 அடியாக இருந்தது. பாசனத்திற்கு, 929 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE