புதுடில்லி :'டில்லியில் அமைக்கப்பட உள்ள புதிய பார்லிமென்ட் மக்களின் பார்லிமென்டாக இருக்கும்' என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
டில்லியில் தற்போதுள்ள பார்லிமென்டில் போதிய இடவசதி இல்லாததால் அதன் அருகிலேயே புதிய கட்டடம் கட்டு வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஸ், நாராயண் சிங் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்த புதிய கட்டடம் அமைய உள்ளது.
![]()
|
நாட்டின் 75வது சுதந்திரதினம் கொண்டாடும் 2022ல் இது பயன்பாட்டுக்கு வரும்.இதன் உள்கட்டமைப்பு வசதிகள் நம் பாரம்பரியம் கலாசாரத்தை பறைசாற்றுவதாக இருக்கும். மேலும் அரசியல் சாசனத்தின் மேன்மையை விளக்கும் கண்காட்சி மையம் அமைய உள்ளது. இதை பொதுமக்கள் பார்க்கலாம். இந்த புதிய பார்லிமென்ட் மக்களின் பார்லிமென்டாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE