பொது செய்தி

இந்தியா

காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் தூண்டி விடும் பாகிஸ்தான்

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே,
ISI, Khalistan, Punjab, Bhindranwale, Pakistan,பாகிஸ்தான், காலிஸ்தான்

புதுடில்லி : பஞ்சாபில், மறைந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை பயன்படுத்தி, காலிஸ்தான் பயங்கரவாதத்தை மீண்டும் துாண்ட, பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், 1980ம் ஆண்டுகளில், காலிஸ்தான் பயங்கரவாதம் மிக தீவிரமாக இருந்தது. காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த பிந்தரன்வாலே, 1984ல், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கையில் கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, அப்போதைய பிரதமர் இந்திரா, அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்பின், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாதம் அடங்கியது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலரும், தற்போது வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாபில் மீண்டும் காலிஸ்தான் பயங்கரவாதத்தை துாண்ட, பிந்தரன்வாலேவின் நெருங்கிய உறவினர் லக்பீர் சிங் ரோடேவை, பாக்., உளவு அமைப்பான, ஐ.எஸ்எஸ்,. பயன்படுத்தி வருவதாக, உளவுத்துறை தெரிவித்துள்ளது.


latest tamil news


உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தபின், அங்கு, பயங்கரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்பு படையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தானால் காஷ்மீரில் வாலாட்ட முடியவில்லை.இதையடுத்து, பஞ்சாப் மீது தன் பார்வையை பாகிஸ்தான் திருப்பியுள்ளது.

பஞ்சாபில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் வாயிலாக, பயங்கரவாதத்தை துாண்ட, ஐ.எஸ்.ஐ., முயற்சித்து வருகிறது.பிந்தரவாலேவின் உறவினர் லக்பீர் சிங் ரோடேவை, இதற்காக, ஐ.எஸ்.ஐ., பயன்படுத்த துவங்கியுள்ளது. முதல்கட்டமாக, காலிஸ்தான் ஆதரவாளர்களை, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக திருப்பத் துவங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாகவே, பஞ்சாபில் சமீபத்தில் சிவசேனா தலைவர் ஹனி மஹாஜன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது; இதில், அவரும், அவரது மகளும் காயமடைந்தனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, காலிஸ்தான் ஆதரவாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க, பஞ்சாப் அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
09-டிச-202013:24:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman விவசாயிகள் போராட்டம் அந்த கேடு கெட்ட பாகிஸ்தானால் தான் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை
Rate this:
Cancel
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
09-டிச-202011:33:36 IST Report Abuse
தமிழன் மக்கள் நலம் மனதில் கொண்டு சட்டம் இயற்றுங்கள். வேளாண் சட்டத்தை இந்தனை பேர் எதிர்கிறார்களென்றால் ஏன் என்று யோசியுங்கள் அதற்கான ஆக்கபூர்வ முடியு எடுக்கணும் .
Rate this:
Suppan - Mumbai,இந்தியா
09-டிச-202013:39:26 IST Report Abuse
Suppanமிரட்டுவது பஞ்சாபி ஏஜென்ட்டுகள் மட்டும்தான். அவர்களின் வருமானம் பறிபோகிறது. பஞ்சாப அரசின் வரி வருமானமும் குறையும். அவர்களைத் தவிர வழக்கமான ஷாஹீன் பாகிகள்,, பாப்புலர் பிரண்ட் அந்நிய கைக்கூலிகள், காலிஸ்தானிகள் நாட்டின் துரோகிகள் மோதி எதிர்ப்பை மட்டும் குறி வைத்து எதிர்க்கின்றனர். மற்ற மாநிலங்களில் எதிர்ப்பில்லையே? யோசித்தீர்களா? எதிர்க் கட்சிகள் நடத்திய நேற்றைய பந்தும் பிசுபிசுத்து விட்டது....
Rate this:
Cancel
09-டிச-202011:13:14 IST Report Abuse
Ganesan Madurai ஏன் அரசாங்கத்தை மிரட்டி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டு பின்னாடி அது முட்டுக்கட்டை போட்டு உள்நாட்டுப் பிரச்சினையை வெளிநாடுகளுக்கு கொண்டு போய் நமது தூதரங்களை தாக்கி பிரதமரை கொலை செய்வோம் என மிரட்டி போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு சுத்தமா அறிவில்லையா இல்ல ஒண்ணு மண்ணு தெரியாத சிறுபிள்ளைகளா? விவசாயிகள் என்னிக்கு மக்களுக்கு இன்னலிழைத்து பிரதமருக்கு கொலை மிரட்டல் விட்டாங்களோ அன்றிலிருந்து இவர் வெறும் காவாலித்தனம் ரவுடித்தனம் செய்யும் காவாலி கூட்டம் ரவுடிகள் மட்டும்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X