புதுச்சேரி : மாநிலத்தின் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் மூலம் கால்நடைகளுக்கு வரக்கூடிய முக்கிய நோய்களான கோமாரி மற்றும் புரூசில்லோசிஸ் (கருச்சிதைவு) நோய்களை வரும் 2025ம் ஆண்டிற்குள் கட்டுப்படுத்தவும், 2030ம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழித்திட திட்டம் வகுக்கப் பட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பசுக்கள், எருமைகள், ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
இதன் முதற்கட்டமாக, அனைத்து பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு 12 இலக்க தனித்துவ அடையாள எண் கொண்ட காது வில்லைகள் பொருத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரி மாநில கால்நடை பராமரிப்பு மற்றும் நலத்துறையின் மருத்துவர்கள், ஊழியர்கள் மூலம் கால்நடைகளுக்கு காது வில்லைகள் பொருத்தும் பணி கடந்த நான்கு மாதங்களாக நடந்து வருகிறது.ஆகையால், மாநில விவசாயிகள் தங்களது பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு தனித்துவ அடையாள எண் கொண்ட காது வில்லைகளை பொருத்தி, கோமாரி நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
ஏதேனும், கால்நடைகள் விடுபட்டு இருப்பின், காது வில்லைகளை பொருத்தி கொள்வதற்கு அருகில் உள்ள கொம்யூன் கால்நடை மருந்தகம், கால்நடை சிறு மருந்தகம் மற்றும் கால்நடை கிளை நிலைய ஊழியர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE