புதுச்சேரி : தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி நகராட்சியுடன் இணைந்து பெண்களுக்கான தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ராஜிவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லுாரியில் நடந்தது.
டாக்டர் பால் தலைமை தாங்கினார். புலமுதல்வர் ராம்குமார் முகாமை துவக்கி வைத்து, இந்த பயிற்சியின் மூலம் பெண்கள் சிறிய நிறுவனங்களை தங்கள் வீட்டிலேயே துவங்கி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளலாம் என கூறினார்.பயிற்சி முகாமில், பால்கோவா, குலாப் ஜாமுன், சுவைமிக்க பால், ஐஸ் கோலா, யோஹர்ட் மற்றும் பன்னீர் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் தயாரிப்பு குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, முகாமில் பங்கேற்றவர்களுக்கு, நகராட்சி ஆணையர் சிவக்குமார் சான்றிதழ் வழங்கினார்.பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நாச்சிமுத்து வாழ்த்தி பேசினார். டாக்டர் மண்டல் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE