பெண்ணாடம் : தொடர் கனமழை காரணமாக முழு அளவை எட்டிய ஓ.கீரனுார் பொதுப்பணித்துறை பாசன ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புரெவி புயல் மழையால் பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள துறையூர், கோனுார், அரியராவி, காரையூர், தாழநல்லுார், தீவளூர், ஓ.கீரனுார், பெ.பூவனுார், சத்திய வாடி, கார்மாங்குடி உள்ளிட்ட பாசன ஏரிகளும் நிரம்பின.பெண்ணாடம் அடுத்த ஓ.கீரனுாரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 193 ஏக்கர் பரப்பிலான பாசன ஏரி முழுஅளவை எட்டிய நிலையில் ஏரியின் தென்கரை பகுதியில் இரண்டு இடங்களில் நேற்று அதிகாலை திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது.
இதுகுறித்து தகவலறிந்த பெலாந்துறை அணைக்கட்டு பாசன உதவி பொறியாளர் பாஸ்கரன் தலைமையிலான ஊழியர்கள், கிராம மக்கள் உதவியுடன் மணல் மூட்டைகள் கொண்டு வந்து, உடைப்பு ஏற்பட்ட இடங்களில் அடுக்கி, தண்ணீர் வெளியேறுவதை தற்காலிகமாக தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE