காரைக்கால் : அம்பகரத்துாரில் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் இறங்கி சுத்தம் செய்தார்.
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பாதிப்பு பகுதிகளை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று பார்வையிட்டார். அப்போது, அம்பகரத்துார் வாய்க்காலில், ஆகாயத்தாமரை அடைத்துக் கொண்டுதால், தண்ணீர் வெளியேறாததால், அருகில் உள்ள விலை நிலங்களில் தண்ணீர் வடியாமல் பயிர்கள் அழுகின.அதனைக் கண்ட அமைச்சர் கமலக்கண்ணன், அதிரடியாக வாய்க்காலில் இறங்கி, ஆகாய தாமரை அடைப்புகளை அகற்ற துவங்கினார்.
அதனைக் கண்ட அப்பகுதி விவசாயிகளும் வாய்க்காலில் இறங்கி ஆகாய தாமரைகளை அகற்றியதும், தண்ணீர் வடியத் துவங்கியது.தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன், கலெக்டர் அர்ஜூன் சர்மா ஆகியோர் கண்காணப்பூர், சேத்துார், பண்டாரவடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE