புதுச்சேரி : சம்பளம் வழங்காததை கண்டித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தினர்.
உழவர்கரை நகராட்சியில் பணியாற்றும் 300 துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த நவம்பர் மாத சம்பளம் வழங்கவில்லை. இதை கண்டித்து, உழவர்கரை நகராட்சியின் அனைத்து சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தொடர் போராட்டத்தை நேற்று முன்தினம் துவக்கினர். இரண்டாம் நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு, கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் சகாயராஜ், பழனிவேலு, முனியன், மாணிக்கம், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE