பைக்குகள் மோதல் போட்டோகிராபர் பலி

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020
Share
Advertisement
புதுச்சேரி : கிழக்கு கடற்கரை சாலையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த போட்டோகிராபர் சிகிச்சைபலனின்றி இறந்தார். பாகூர் மணப்பட்டு, வண்ணன்குளம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விக்கி (எ) முத்துக்கிருஷ்ணன்,28; மணப்பட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இவர் கடந்த 4ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, தனது நண்பரின் பி.ஒய்.01.சி.க்யூ. 7098 பதிவெண் கொண்ட பல்சர்

புதுச்சேரி : கிழக்கு கடற்கரை சாலையில் பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் படுகாயமடைந்த போட்டோகிராபர் சிகிச்சைபலனின்றி இறந்தார்.

பாகூர் மணப்பட்டு, வண்ணன்குளம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் விக்கி (எ) முத்துக்கிருஷ்ணன்,28; மணப்பட்டில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார்.இவர் கடந்த 4ம் தேதி, மாலை 6:30 மணிக்கு, தனது நண்பரின் பி.ஒய்.01.சி.க்யூ. 7098 பதிவெண் கொண்ட பல்சர் பைக்கில், கிழக்கு கடற்கரைச்சாலையில் கருவடிக்குப்பத்தில் இருந்து லதா ஸ்டீல் அவுஸ் நோக்கி வந்து கொண்டிருந்தார்.அதே சாலையில் ஒருவழிப்பாதையில், லதா ஸ்டீல் அவசில் இருந்து இருந்து கருவடிக்குப்பம் நோக்கி, நெல்லித்தோப்பு, கே.சி. நகரைச் சேர்ந்த ராயப்பன் சந்தானம் ஓட்டி வந்த. பி.ஒய். 01.சி.கே. 9168 என்ற ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதியது .

இதில் துாக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்த முத்துகிருஷ்ணன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். போக்குவரத்து வடக்கு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X