சென்னை : 'மறைந்த ஜெயலலிதா மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தரம் தாழ்ந்து பேசியுள்ள தி.மு.க. - எம்.பி. ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் வசிப்பவர் திருமாறன். அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணை செயலரான இவர் டி.ஜி.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: இமாலய '2ஜி' ஊழல் வழக்கை சந்தித்து வரும் தி.மு.க. - எம்.பி. --- ஆ.ராஜா சென்னையில் டிசம்பர் 5ல் பேட்டி அளித்தார்.
அப்போது தன் மீதான கறைபடிந்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக மறைந்த ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார். பேட்டி என்ற போர்வையில் தரம் தாழ்ந்து தனி நபர் ஒழுக்கமின்றி பெண்மையை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

ஜெயலலிதா மற்றும் பழனிசாமி ஆகியோரை ஒருமையில் பேசியுள்ளார்.மேலும் இவர்கள் குறித்து உண்மைக்கு மாறாக பொதுமக்களிடம் அவதுாறு பரப்பும் வகையில் ராஜா பேசியிருப்பது வெறுக்கத்தக்க பேச்சு என்ற அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உகந்ததாகும். அத்துடன் 6ம் தேதியும் பழனிசாமி குறித்து ஒருமையில் பேசியதுடன் பொய்யான தகவல்களை கூறியுள்ளார். ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE