புதுச்சேரி : முதல்வர் பங்கேற்ற மறியல் போராட்டத்தை சுட்டி காட்டி, கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நேற்று பந்த் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், கொரோனா பரவல் தடுப்பு முறைகளை பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யவும் மத்திய உள்துறை, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியது.மத்திய அரசின் கடிதம் மற்றும் புதிய பஸ் நிலையம் எதிரில் நடந்த மறியல் போராட்டத்தில், முதல்வர் நாராயணசாமி பங்கேற்ற புகைப்படத்தையும், சமூக வலைதளத்தில் பதிவிட்டு கவர்னர் கிரண்பேடி கூறியிருப்பதாவது;இதுபோன்ற சூழ் நிலையை பார்க்கும்போது புதுச்சேரியில் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கும்.
இதை தடுக்க மருத்துவம் மற்றும் தடுப்புக் குழுவினர் தயாராக வேண்டும். இது புதுச்சேரி மக்களுக்கான முன்னெச்சரிக்கை பதிவு மட்டுமே. எனவே, பொதுமக்கள் புதுச்சேரியை பாதுகாக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE