வில்லியனுார் : தொடர் மழையால் கோர்க்காடு ஏரி நிரம்பி உள்ளதால், அமைச்சர் கூறியபடி, ஏரியில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தலமாக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வில்லியனுார் அடுத்த கோர்க்காடு கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. மாநிலத்தின் நான்காவது பெரிய ஏரியாகும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரண மாக கோர்க்காடு ஏரி முழு கொள்ளளவான 48.2 மி. கன அடி தண்ணீர் நிரப்பி உள்ளது.ஏரிக்கு தொடர்ந்து வரும் உபரி நீர், வடக்கு பகுதியில் உள்ள மதகு வழியாக குடுவையாற்றுக்கு செல்கிறது.இதனை பார்க்கும் பொதுமக்கள், அமைச்சர் கந்தசாமி கூறியபடி, கோர்க்காடு ஏரியில் படகு குழாம் அமைத்து, சுற்றுலா தலமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE