புதுச்சேரி : புனித ஜென்மராக்கினி அன்னை ஆலயத்தின் பெரு விழா நேற்று நடந்தது. புதுச்சேரி புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தின் 329-வது ஆண்டு பங்கு பெருவிழா, கடந்த 29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதைத் தொடர்ந்து, தினசரி திருப்பலி, மறையுரைகள் நடந்து வந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு, புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர், கூட்டு திருப்பலி நடத்தினார்.கொரோனா காரணமாக அலங்கரிக்கப்பட்ட தேர், பக்தர்கள் பிரார்த்தனைக்காக ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.மாலையில் நடந்த விழாவில் முதல்வர் நாராயணசாமி, முதல்வரின் பாராளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE