திருக்கோவிலுார் : -வேளாண் திருத்த சட்டம், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி திருக்கோவிலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு தழுவிய பந்த்திற்கு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர். திருக்கோவிலுாரில் தி.மு.க., உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தங்கம், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி, காங்., பொதுக்குழு உறுப்பினர் முருகன், நகர தலைவர் கதிர்வேல், இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் ரவி, நகர செயலாளர் பஷீர் அகமது, மா.கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், வி.சி., ஒன்றிய செயலாளர் வீரவளவன், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE