கம்பம் : தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் தொழு நோய் கண்டறியும் பணி இந்த வாரம் துவங்க உள்ளது.
மார்ச் வரை நடைபெறும். ஆயிரத்து 500 நபர்களுக்கு 2 தன்னார்வலர்கள் என வீடு வீடாக சென்று இப்பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. தேனி மாவட்ட தொழுநோய் தடுப்பு துணை இயக்குநர் ரூபன்ராஜ் பயிற்சியளித்தார். மருத்துவ அலுவலர் சுதா, டாக்டர்கள் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன் பங்கேற்றனர்.டாக்டர்கள் கூறுகையில், ' தோலில் உணர்ச்சியற்ற தேமல், மினுமினுப்பு, கை, கால்கள் மதமதப்பு இருந்தால் தொழு நோயாக இருக்க வாய்ப்புள்ளது.
இப்பணியில் ஈடுபடுவோருக்கு கவுரவ ஊதியம் வழங்கப்படும். தொழு நோய் கண்டறிந்தவர் களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது,'' என்றனர். வட்டார தொழுநோய் மேற்பார்வை யாளர் ரமேஷ்பாபு, சுகாதார ஆய்வாளர் சூரியகுமார், கிராம செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE