பொது செய்தி

தமிழ்நாடு

561 இடங்கள் காலி

Added : டிச 09, 2020
Share
Advertisement
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் 25சதவீத இட ஒதுக்கீட்டு சேர்ந்து இலவசமாக படிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது. எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேரும் மாணவர் 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்கலாம். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு

குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நலிவடைந்த, வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் சிறுபான்மையினர் அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில் 25சதவீத இட ஒதுக்கீட்டு சேர்ந்து இலவசமாக படிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேரும் மாணவர் 8ம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படிக்கலாம். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்குகிறது. தேனி மாவட்டத்தில் 124 நர்சரி, மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின்படி 1729 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் சேர ஆக.,27 முதல் செப். 25 வரை விண்ணப்பிக்கவும், கூடுதல் அவகாசமாக அக். 10, நவ. 12 வரை என வாய்ப்பு வழங்கப்பட்டன. ஆனாலும் இத் திட்டத்தில் மெட்ரிக்கில் உள்ள 932 இடங்களில் 689 பேரும், நர்சரியில் உள்ள 797 இடங்களில் 479 பேரும் என மொத்தம் 1168 பேர் மட்டுமே சேர்ந்தனர். 561 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த ஆண்டு 68 சதவீத இடங்களே நிரம்பின. 2019 ல் 1193 இடங்கள் மட்டுமே நிரப்பின.ஆர்வம் குறைவு ஏன்இத் திட்டத்தில் படிக்க வாய்ப்பு இருந்தும் மாணவர்கள் சேராததற்கு காரணம் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பள்ளி ஒரு கி.மீ. துாரம் என துாரம் நிர்ணயிக்கப்பட்டதால் காலியிடம் அதிகரிக்கிறது. விண்ணப்பம் ஆன்-லைன் பதிவிடும் போது கூகுளில் துாரம் கணக்கிட்டு தொலைவில் உள்ள சிறந்த பள்ளிகளில் சேர முடியாமல் தள்ளுபடி ஆகிறது. முன் 3 கி.மீ. சுற்றளவு துாரம் நிர்ணயித்த போது இடம் பிடிக்க போட்டி நிலவி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிலை இருந்தது.நர்சரி பள்ளியில் சேர்ந்தால் 5ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். மெட்ரிக் பள்ளிகளில் சேர்ந்தால் 8 ம் வகுப்பு வரை படிக்கலாம் என்பதால் பெற்றோர் பிள்ளைகளை அங்கு சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். பள்ளியின் துாரத்தை அதிகரித்து அனுமதி வழங்கினால் பலரும் பயன்பெறுவார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X