பொது செய்தி

தமிழ்நாடு

பலுவு பாகற்காய் மகசூல்: மழையால் சரிவு

Added : டிச 09, 2020
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை பகுதி மலை சார்ந்த பகுதிகளில் விளையும் பலுவு பாகற்காய் வரத்து மழையால் குறைந்தது. வடமதுரை ஒன்றியத்தில் ஏ.கோம்பை, பஞ்சம்தாங்கி, காக்காயன்பட்டி, புத்துார், மம்மானியூர் மலைப்பகுதிகளில் பலுவு பாகற்காய் விளைகிறது. மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் கிழங்கு தொடர்ந்து சில நாட்கள் மழை கிடைத்தால் வளர்ந்து மகசூல் தருகிறது.ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில்

வடமதுரை : வடமதுரை பகுதி மலை சார்ந்த பகுதிகளில் விளையும் பலுவு பாகற்காய் வரத்து மழையால் குறைந்தது.

வடமதுரை ஒன்றியத்தில் ஏ.கோம்பை, பஞ்சம்தாங்கி, காக்காயன்பட்டி, புத்துார், மம்மானியூர் மலைப்பகுதிகளில் பலுவு பாகற்காய் விளைகிறது. மண்ணிற்குள் புதைந்து கிடக்கும் கிழங்கு தொடர்ந்து சில நாட்கள் மழை கிடைத்தால் வளர்ந்து மகசூல் தருகிறது.ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை உச்சத்தை எட்டும்.இறைச்சிக்கு இணையாக கருதப்படும் பலுவு பாகற்காய் மருத்துவ குணம் கொண்டது. நடப்பாண்டில் செப்டம்பர் மாதமே வரத்து துவங்கியது. தற்போது தொடர்ந்து மழை பெய்வதால் மகசூல் பாதித்து, வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

விவசாயிகளில் கிலோ ரூ. 120 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ரூ.160 வரை விற்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X