திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சர்க்கரை ரேஷன் கார்டை, அரிசி கார்டாக மாற்ற டிச.20 க்குள் விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் 6.50 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 9,201 சர்க்கரை கார்டுகள் உள்ளன.
இவர்கள் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. பொங்கல் பரிசு கூட பெற முடியாமல் இருந்தது. கடந்த ஆண்டு அரிசி கார்டாக மாற்ற அவகாசம் வழங்கப்பட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து டிச.20 வரை அதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.www.tnpds.gov.in ல் 'சர்க்கரை அட்டையை அரிசியாக மாற்ற' என்பதை கிளிக் செய்து நுழைய வேண்டும். அதில் பயனாளர் பகுதியில் ரேஷன் கார்டில் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை பதிவு செய்து, 'கேப்ச்சா' குறியீட்டை கொடுத்ததும், அலைபேசிக்கு 'ஓ.டி.பி.,' வரும். அதனை பதிவு செய்து ரேஷன் கார்டில் தேவையான மாற்றங்களை செய்யலாம்.
இல்லையெனில் விண்ணப்பத்துடன் குடும்ப அட்டை நகலை இணைத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். அவை அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு, அரிசி கார்டாக மாற்றப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE