வட்டி ரத்தானால் வங்கிகளுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு: மத்திய அரசு

Updated : டிச 09, 2020 | Added : டிச 09, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி: 'கடன்களுக்கான ஆறு மாத வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு, ஆறு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில் துறையினர் சார்பில், 'மார்ச் - ஆக., வரை அனைத்து கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Loan moratorium case, Moratorium, SC, Supreme Court, Bank, Govt

புதுடில்லி: 'கடன்களுக்கான ஆறு மாத வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளுக்கு, ஆறு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' என, மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில் துறையினர் சார்பில், 'மார்ச் - ஆக., வரை அனைத்து கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்களை, உச்ச நீதிமன்ற நீதிபதி, அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இவ்வழக்கு நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார்;

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளுக்கும் ஊக்கச் சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட, 27 துறைகளுக்கு, அவசர கடன் உதவி திட்டத்தின் கீழ், உத்தரவாதமில்லா கடன் வழங்க, மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தாண்டு மார்ச் -ஆக., வரையிலான ஆறு மாதங்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் வரையிலான அனைத்து கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை ஏற்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


latest tamil news



இதே காலத்தில், வட்டியும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, மனுதாரர்கள் கோரியுள்ளனர். அவ்வாறு செய்தால், வங்கிகளுக்கு, ஆறு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். வங்கிகளின் சொத்து மதிப்பு, 50 சதவீதம் குறைந்து, அவற்றின் செயல்பாடு பெரிதும் பாதிக்கப்படும். இது, வங்கியில் டிபாசிட் செய்துள்ள, மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதிக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
09-டிச-202019:21:06 IST Report Abuse
mohan அரசியல்வாதிகள் எல்லோரும் ஒன்றிணைத்து வெளிநாட்டிற்கு போன கடன் காரர்களை, பிடித்து வந்தால்.. நம் இந்தியா அரசியல்வாதிகள் அனைவரும் ரொம்ப நல்ல வர்கள் என பாராட்டலாம்...
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
09-டிச-202018:40:27 IST Report Abuse
மன்னிப்பு ஐயா ஒரு சந்தேகம் GST வரி சலுகை ஏன் வியாபாரிகளுக்கு தருகிறார்கள். வரி கொடுப்பது மக்கள் , வரியை அரசிடம் செலுத்துவது வியாபாரிகள் வேலை. ஆனால் வரி சலுகை மட்டும் வியாபாரிகளுக்கு. ஏன் கொடுத்த வரியை ஆன்லைன் மூலம் வரி கொடுத்த மக்களுக்கு தர கூடாது.ஓரே குழப்பமாக இருக்கே?
Rate this:
Cancel
A NATARAJAN - NEW DELHI,இந்தியா
09-டிச-202016:50:07 IST Report Abuse
A NATARAJAN அள்ளி விடுங்க 6 லக்ஷம் கோடின்னு. எவன் கேட்க போறான். நீங்க எழுதுறது தான் கணக்கு . பேப்பர் ல என்ன வேணாலும் சொல்லலாம்.. இந்தியாவில் உள்ள எல்லா வங்கி கணக்கின் மொத்த தொகையே 6-7 லக்ஷம் கோடி தான் பா . ...சரியான டுமீல் பார்ட்டி போல இருக்கே. ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X