பொது செய்தி

தமிழ்நாடு

இளையோர்களுக்கு சாகச பயிற்சி

Added : டிச 09, 2020
Share
Advertisement
இத்துறையின் நோக்கம் என்னதேசிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கெடுக்கும் வகையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1972 ல் நேரு யுவ கேந்திரா எனும் அமைப்பை நிறுவினார். இதன் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு, தொழில் சார்ந்த பயிற்சி, பொது சேவை, பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களால் வழங்கப்பட்டு

இத்துறையின் நோக்கம் என்னதேசிய ஒருமைப்பாடு மற்றும் வளர்ச்சியில் இளைஞர்கள் பங்கெடுக்கும் வகையில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1972 ல் நேரு யுவ கேந்திரா எனும் அமைப்பை நிறுவினார்.

இதன் மூலம் இளைஞர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி, விளையாட்டு, தொழில் சார்ந்த பயிற்சி, பொது சேவை, பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களால் வழங்கப்பட்டு வருகிறது.இத்துறை மத்திய இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.n விருதுநகரில் நேரு யுவ கேந்திரா எப்போது துவங்கப்பட்டது1989ல் துவங்கப்பட்டது. இதன் மாவட்ட ஆலோசனைக்குழு தலைவராக கலெக்டர் கண்ணன் உள்ளார். தேசிய அளவில் 623 மாவட்டங்களில் நேரு யுவ கேந்திரா அமைப்பு செயல்படுகிறது.

நேரு யுவ கேந்திரா மன்றம் துவங்குவது எப்படி- 15 முதல் 29 வயதுள்ள 15க்கு மேற்பட்ட தன்னார்வலர்கள் குழுவாக இணைந்து மன்றம் துவக்கலாம். அதற்கான அங்கீகாரம் கலெக்டர் கண்ணன் பரிந்துரைப்படி மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் மூலம் வழங்கப்படும்.n சிறந்த உறுப்பினர்களை தேர்வு செய்வது எப்படி- சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜன., 12ல் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறந்த யுவ கேந்திரா மன்றம் ,உறுப்பினர்களுக்கு கலெக்டர் விருது வழங்குகிறார். இம்மன்றத்தின் செயல்பாடுகள், உறுப்பினர்களின் திறன் மேம்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் விருது வழங்கப்படுகிறது.

நேரு யுவ கேந்திராவில் பழங்குடியினர் பங்களிப்பு என்ன.- சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட நக்சல் நடமாட்டம் மிக்க மாநிலங்களில் பழங்குடி இளைஞர்களின் கவனம் நக்சல் அமைப்பின் பால் சென்று விடக்கூடாது என்பதற்காக அம்மாநிலங்களின் பழங்குடி இளைஞர்களை வளர்ச்சியடைந்த மாநிலங்களுக்கு அழைத்து வந்து 15 நாட்கள் முகாம் நடத்தி தேச வளர்ச்சிக்கு பாடுபடுவது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டம், மாநிலம் வாரியாகவும் இதுபோன்ற புத்தாக்க முகாம்கள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.n விருதுநகரில் மன்றங்கள் எத்தனை உள்ளது.11 வட்டாரங்களில் 6500 உறுப்பினர்களை கொண்ட 603 மன்றங்கள் செயல்படுகின்றன.

கொரோனா ஊரடங்கின் போது பங்களிப்பு என்ன.தனிமை முகாம்களில் நோயாளிகளுக்கு உதவுதல், வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் இலவசமாக வழங்குதல், துாய்மைப்பணி உள்ளிட்டவைகளில் மன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.n மன்ற உறுப்பினர்களுக்கு சாகச பயிற்சி அளிக்கப்படுகிறதா-மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட மன்ற உறுப்பினர்களை ராமேஸ்வரம் அழைத்து சென்று கடலில் மூழ்கியோரை மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதுபோன்ற சாகச பயிற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர்புக்கு 94894 62140.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X