சிவகாசி : மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இக்குழுக்களின் புதிய உறுப்பினர்களாக சிவகாசி சித்துராஜபுரம் பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்துார் சொக்கலாம்பட்டி சக்திநடேசன், அருப்புக்கோட்டை சுப்ரமணியபுரம் மோகன்வேல், சிவகாசி விஸ்வநத்தம் முத்துப்பாண்டி, சாத்துார் வெங்கடாசலபுரம் திருவேங்கிடசாமி, விருதுநகர் ரோசல்பட்டி பாலகிருஷ்ணன், சிவகாசி கட்டளைப்படி ரோடு தெய்வம், ராஜபாளையம் சொக்கநாதன்புத்துார் காமராஜ், ஸ்ரீவி., டி. மனகசேரி செல்லப்பாண்டியன் நியமிக்கப் பட்டுள்ளனர்.
விற்பனை குழு உரிமம் பெற்றவர்களாக சாத்துார் எம்.எஸ்.மாலதி அண்டு சன்ஸ் தயானந்த், ஸ்ரீவி., தேசியப்பன் சன்ஸ் தனசேகர், விருதுநகர் ஸ்ரீ பரணி ஆயில் மில்ஸ் ராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நடிகர் பிரபாத் உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE