சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலுவையில் கொரோனா வழக்குகள்

Added : டிச 09, 2020
Share
Advertisement
விருதுநகர் : மாவட்டத்தில் கொரோனா வழக்குகள் நிலுவையில் இருப்பதால் போலீசாரிடம் இருந்து தடையின்மை சான்று' பெற முடியாமல் அரசுவேலை, பாஸ்போர்ட் பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் மார்ச் - ஆகஸ்ட் வரை உச்சகட்டத்தில் இருந்தது. தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு வெளியிடங்களில் சுற்றி திரிந்தோர் மீது போலீசார் வழக்குப் பதிவு

விருதுநகர் : மாவட்டத்தில் கொரோனா வழக்குகள் நிலுவையில் இருப்பதால் போலீசாரிடம் இருந்து தடையின்மை சான்று' பெற முடியாமல் அரசுவேலை, பாஸ்போர்ட் பெற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று பரவல் மார்ச் - ஆகஸ்ட் வரை உச்சகட்டத்தில் இருந்தது. தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு வெளியிடங்களில் சுற்றி திரிந்தோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மருந்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க டூவீலர்களில் செல்வோர் மீது வழக்கு பதிவு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராதம் வசூலிக்கப்பட்டது.

பறிமுதலான ஆயிரக்கணக்கான டூவீலர்களை திரும்ப பெற முடியாமல் ஒன்பது மாதங்களை கடத்து துருப்பிடித்து வருகிறது.விருதுநகர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் பாலகிருஷ்ணசாமி கூறியதாவது: அரசு, தனியார் வேலை, பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போலீசாரின் குற்றமற்றவர்' என தடையின்மை சான்று அவசியம். கொரோனா வழக்கு பைசல் ஆகாமல் நிலுவையில் இருப்பதால் போலீசார் தடையின்மை சான்று வழங்க மறுக்கின்றனர். கொரோனா வழக்குகளை அரசு ரத்து செய்தால் மட்டுமே தடையின்மை சான்று பெறும் நிலையில் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு தளர்வு ஏற்பட்டு படிப்படியாக சகஜ நிலை திரும்புகிறது. தடையின்மை சான்று வழங்கவும், டூவீலர்களை உடனே விடுவிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X