கொட்டாம்பட்டி : ''கொட்டாம்பட்டி பகுதியில் கத்திரியில் காய் துளைப்பான் மற்றும் வேர் அழுகல் நோய் தாக்குதலை விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும்,'' என, தோட்டக்கலை உதவி துறை இயக்குனர் ராஜி கேட்டு கொண்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: காய் துளைப்பான் புழுவை கட்டுப்படுத்த கத்தரி நடவு செய்த 15 வது நாளில் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது புரபனோபாஸ்சை ஒரு லிட்டருக்கு 2 மி.லி., அல்லது கார்பரில் நனையும் துாள் ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். பூக்கும் தருணத்தில் மாலத்தியான் 50 இ.சி., மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி., வீதம் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த கத்தரி செடிகள் நடவு செய்த 10 வது நாள் கழித்து 2 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ மக்கிய எருவுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது மண்ணில் இடலாம்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் கார்பன்டீசம் என்ற விகிதத்தில் கலந்து வேர் நனையுமாறு ஊற்றலாம், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE