மேலுார் : மேலுார் தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியுள்ளதாவது: சங்கத்தின் கீழ் 38 மாவட்ட சங்கங்கள், அவற்றின் கீழ் இயங்கும் 6 ஆயிரம் தனியார் சுயநிதி பள்ளிகள் 9 மாதங்களாக கொரோனா தடையுத் தரவால் பூட்டியுள்ளன. மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தாமல் ஆண்டு இறுதிதேர்வு நடத்துவது அல்லது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது சரியாக இருக்காது. முதல் சுற்றிலேயே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி அவர்களை 2021 ஜன., முதல் வகுப்புகளை திறந்து படிக்க அனுமதிக்க வேண்டும், என கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE