விருதுநகர் : விருதுநகர் அருகே சிதிலமடையும் பழமையான எல்லிங்கநாயக்கன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலை ஹிந்து அறநிலையத்துறை சீரமைக்க முன் வர வேண்டும் . விருதுநகர் செங்குன்றாபுரம் அடுத்துள்ள எல்லிங்கநாயக்கன்பட்டியில் ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமையான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. திருப்புகழில் இக்கோயிலை குறிப்பிடும் வகையில் 'செங்குன்றாபுரம் வாழ் குமரா எனும் முருகோனே' என முருகனை புகழ்ந்து பாடும் வரி உள்ளது.
வரகுண பாண்டியன் காலத்து கோயிலான இங்கு கல்வெட்டு எதுவும் இல்லை. தொல்லியல் ஆய்வறிஞர்கள் கோயிலை ஆய்வு செய்து சென்றுள்ளதால் விரைவில் அதற்கான கருத்துரு கிடைக்கப்பெறும் என அறநிலையத்துறையினர் கூறுகின்றனர். கோயில் பழமையான கல் கட்டடம் என்பதால் விமானம், சுற்றுச்சுவர் ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும் வளாகத்திற்குள் மரங்கள் அதிகளவில் உள்ள நிலையில் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. அறநிலையத்துறையினர் பழமையான இக்முருகன் கோயிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் கோயிலில் உள்ள வியக்க வைக்கும் பழமையை உலகம் அறிந்திட செய்ய வேண்டும்.
விரைவில் திருப்பணிகள் திருப்பணி செய்வதற்கான பட்டியலில் இக்கோயிலை சேர்த்துள்ளோம். பராமரிப்பு செய்வதற்கான உத்தேச மதிப்பீட்டையும் அரசுக்கு சமர்ப்பித்துள்ளோம். விரைவில் கோயில் சீரமைக்கப்படும்கணேசன், உதவி ஆணையர், ஹிந்து அறநிலையத்துறை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE