விருதுநகர் : விருதுநகர் பெத்தனாட்சி நகர் ரோடு, உட்புற தெரு ரோடுகள் சகதியாக காணப்படுவதால் பொதுமக்கள் நித்தம் நித்தம் தவிப்பை சந்திக்கின்றனர்.
விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சியில் உள்ளது பெத்தனாட்சி நகர் . ஊரக பகுதி என்றாலும் நகராட்சியை யொட்டியுள்ளதால் பஸ் வசதி உள்ளிட்ட வசதிகளுக்காக இப்பகுதியில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தன. ஆனால் அடிப்படை வசதிகள் மட்டும் சுத்தமாக இல்லை. இந்நகர் பகுதியில் ரோடு வசதி மிகவும் மட்டமான நிலையில் உள்ளது. தனியார் மண்டபம் அருகே மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் அரங்கேறுகின்றன.
இதே போல் உட்புற தெருக்களான விவேகானந்தர் தெரு, தாமரை தெரு பகுதிகளில் வாகனங்கள் அவசரம் என்றால் கூட வெளியே வர முடியாத நிலை உள்ளது. வ.உ.சி., தெருவில் ரோட்டில் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது. பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகளாலும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.மழை வந்தாலே திண்டாட்டம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் குடியிருப்புகள் பெருகிவிட்டன. அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பேசிவிட்டோம்.
எந்த பலனுமில்லை. ரோடு, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். மழைக்காலம் வந்தாலே எங்கள் நிலைமை திண்டாட்டமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காண வேண்டும்.சங்கர், கிளை செயலாளர், மார்க்சிஸ்ட்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE