மதுரை : 'ஆயுர்வேத டாக்டர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்' என்ற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு, தனியார் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட அவை தலைவர் பாப்பையா, செயலாளர் ரமேஷ், இந்தியமருத்துவ சங்க கிளை செயலாளர் அமானுல்லா தலைமை வகித்தனர்.டாக்டர் ரமேஷ் பேசியதாவது: அலோபதி என்பது நவீன அறிவியல் சிகிச்சை முறை. இது உலகெங்கும் பிரதானமானதாக உள்ளது. தற்போது ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை, யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய பாரம்பரிய சிகிச்சை முறைகளை ஒருங்கிணைத்து ஆயுஷ் என்ற தனி அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஆயுர்வேதா டாக்டர்களும் பயிற்சிக்கு பிறகு 39 வகை அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என்பதை ஏற்க முடியாது. அறுவை சிகிச்சைக்கு மேற்படிப்பு துவங்குவதும் ஏற்புடையதல்ல. அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
டிச., 11 காலை 6:00 முதல் மாலை 6:00 வரை தனியார் மருத்துவமனைகள் மூடப்படவுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE