மதுரை : விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வில்லவன்கோதை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:பா.ஜ.,வின் வேல்யாத்திரைக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களை யாத்திரையில் பின்பற்றவில்லை. கொரோனா பரவும் அபாயம் உள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவிட வேண்டும். வேல்யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: வேல்யாத்திரை முடிந்துவிட்டது. இதனால் மனு காலாவதியாகிவிட்டது. தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE