பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்; கம்யூ., கட்சியினர் கைது

Added : டிச 09, 2020
Share
Advertisement
ஈரோடு: டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மார்க்., கம்யூ., கட்சியினர், ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு, சூரம்பட்டி, நான்கு ரோட்டில், கமிட்டி உறுப்பினர் பொன்பாரதி தலைமையில், மறியலில் ஈடுபட்ட ஒன்பது பெண்கள் உட்பட, 36 பேரை கைது செய்தனர். இதேபோல் மூலப்பாளையம்,

ஈரோடு: டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், மார்க்., கம்யூ., கட்சியினர், ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு, சூரம்பட்டி, நான்கு ரோட்டில், கமிட்டி உறுப்பினர் பொன்பாரதி தலைமையில், மறியலில் ஈடுபட்ட ஒன்பது பெண்கள் உட்பட, 36 பேரை கைது செய்தனர். இதேபோல் மூலப்பாளையம், வீரப்பன்சத்திரத்தில் மறியலில் ஈடுபட்ட, மொத்தம், 180 பேர் கைது செய்யப்பட்டனர்.

* அந்தியூர் இ.கம்யூ., கட்சியினர், தி.மு.க.,வினர், அந்தியூர் பஸ் ஸ்டாண்ட், மைக்கேல் பாளையம், கிருஷ்ணாபுரம், மூலக்கடை, பிரம்மதேசம், குருவரெட்டியூர் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற, 112 பெண்கள் உட்பட, 237 பேரை போலீசார் கைது செய்தனர்.


* மொடக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட, இ.கம்யூ., மற்றும் மார்க்., கம்யூ., கட்சியை சேர்ந்த, 16 பேரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X