ஈரோடு: குண்டேரிபள்ளத்தில் அதிகபட்ச மழை பதிவானது. வங்க கடலில் ஏற்பட்ட புயலால், கடந்த சில தினங்களாக மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில், அதிகபட்சமாக, 25 மி.மீ., மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கோபி, 1, தாளவாடி, 3, சத்தியமங்கலம், 15, பவானிசாகர், 13, அம்மாபேட்டை, 7, கொடிவேரி, 15.2, வரட்டுபள்ளம், 7.6, ஓலப்பாளையம், 5, புங்கம்பாடி, 2, சிவகிரியில், 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால், ஈரோடு மாநகரில் குளிர் அதிகரித்துள்ளது. நேற்று மதியம் மாநகரில், 2:00 மணி முதல், 2:30 மணி வரை, மழை பெய்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE